பொய் சொல்லும் இமான்... டிராமா போடும் சிவகார்த்திகேயன்... உண்மையை உடைத்தப் பிரபலம்!

பொய் சொல்லும் இமான்... டிராமா போடும் சிவகார்த்திகேயன்... உண்மையை உடைத்தப் பிரபலம்!

சிவகார்த்திகேயன் - இமான் பிரச்சினையில் உண்மை என்ன என்பது எல்லோருக்குமேத் தெரியும் எனவும் சிவகார்த்திகேயன் டிராமா போடுகிறார் எனவும் பிரபலம் ஒருவர் தனது பேட்டியில் உடைத்துப் பேசியுள்ளார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் தன்னுடைய பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் இதை அவரிடம் எதிர்பார்க்கவில்லை என்றும் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இமானின் முன்னாள் மனைவி மோனிகாவும், சிவகார்த்திகேயன் தங்கள் குடும்பத்தை சேர்த்து வைக்க முயற்சித்ததையே இமான் அவ்வாறு கூறியுள்ளார் எனப் பேட்டிக் கொடுத்தார். சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக மோனிகாவும் திரையுலகில் பல பிரபலங்களும் பேசினர். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்

இந்த நிலையில், இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி இமானிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘சரி, தவறு எது என்பது மனிதர்களைத் தாண்டி இறைவனுக்கு தெரியும். இது எல்லாவற்றிற்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார் என நம்புகிறேன்’ என்று கூறினார். ஆனால், இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை எதுவும் வாய்திறக்கவில்லை. பண்டிகை என்றால் தனது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து வாழ்த்து சொல்லும் சிவகார்த்திகேயன் இந்த தீபாவளி பண்டிகைக்கும் தவறாமல் புகைப்படம் பகிர்ந்து வாழ்த்துக் கூறினார்.

குடும்பத்துடன் சிவகார்த்திகேயன்...
குடும்பத்துடன் சிவகார்த்திகேயன்...

இந்த நிலையில், பத்திரிகையாளர் பிஸ்மி தனது சமீபத்திய பேட்டியில், “சிவகார்த்திகேயன் மற்றும் இமான் பிரச்சினையில் உள்ள உண்மை என்ன என்பது பத்திரிகையாளர்களுக்கு நன்றாக தெரியும். அது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனுக்கு பெண்கள் மத்தியில் ஒரு கெட்ட பெயர் வந்துவிட்டது அதை சரி செய்வதற்காகத்தான் அந்த போட்டோ. இமான் சொன்ன குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், என்னால் குடும்பத்தோடு இப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எனவே இமான் சொன்னது பொய் என்பதை உணர்த்தவே சிவகார்த்திகேயன் இப்படி டிராமா போட்டுள்ளார்" என்று கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?

பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in