2022-ஆம் ஆண்டின் இந்தியாவின் பிரபல நட்சத்திரம் தனுஷ்

IMDb பட்டியல் வெளியானது
2022-ஆம் ஆண்டின் இந்தியாவின் பிரபல நட்சத்திரம் தனுஷ்

வருடாந்திரம் வெளியாகும் ஐஎம்டிபி பட்டியலின்படி, 2022-ஆம் ஆண்டின் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்திருக்கிறார். ஐஎம்டிபி டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இதர நட்சத்திரங்கள் எவரென பார்க்கலாமா?

சர்வதேச அளவில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஓடிடி படைப்புகள் உள்ளிட்டவற்றின் தகவல்களை சேகரித்து வழக்கும் ஆன்லைன் தரவு தளமாக செயல்படுகிறது ஐஎம்டிபி. இதன் சார்பில், மிகவும் பிரபலமான நட்சத்திரங்களை பட்டியல் ஆண்டு இறுதியில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் 2022ஆம் ஆண்டின் டாப் 10் இந்திய நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

இந்த பட்டியலில் இந்திய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார் நடிகர் தனுஷ். ஹாலிவுட்டின் ’தி க்ரே மேன்’ முதல் கோலிவுட்டின் ’திருச்சிற்றம்பலம்’ வரை அவரது வெற்றிப்படங்கள் இந்த சாதனைக்கு களம் அமைத்து தந்திருக்கின்றன. டாப் 10 பட்டியலில் தனுஷ் தவிர வேறெந்த கோலிவுட் நடிகரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷை தொடர்ந்து இரண்டாமிடத்தில் பாலிவுட் நடிகை அலியாபட் வருகிறார். இந்த வருடத்தின் பிரம்மாஸ்திரா-1, ஆர்ஆர்ஆர், கங்குபாய் உள்ளிட்ட படங்களின் பிரபலம் அலியாபட்டுக்கு உதவியிருக்கிறது. மூன்றாம் இடத்தில் பொன்னியின் செல்வன் -1 படத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் இடம்பிடித்திருக்கிறார். ஆர்ஆர்ஆர், ஆச்சார்யா படங்களில் கவனம் ஈர்த்த டோலிவுட்டின் ராம்சரண் தேஜா நான்காம் இடத்தையும் வகிக்கிறார். ஐந்தாம் இடத்தில் யசோதா திரைப்படத்தில் நடித்திருக்கும் சமந்தா பிடித்திருக்கிறார்.

அதற்கடுத்த இடங்களை பாலிவுட் நட்சத்திரங்களான ஹிர்த்திக் ரோஷன், கியரா அத்வானி, டோலிவுட் நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோர் பிடித்துள்ளனர். பத்தாவது இடத்தில் கேஜிஎஃப்-2 படத்தில் நடித்த நடிகர் யாஷ் வருகிறார்.

ஐஎம்டிபி தளத்தில் பிரபல இந்திய நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பெற்றிருப்பதன் மூலம்அடுத்தடுத்த இடங்களை பாலிவுட் நட்சத்திரங்களான ஹிர்த்திக் ரோஷன், கியரா அத்வானி, டோலிவுட் நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோர் பிடித்துள்ளனர். பத்தாவது இடத்தில் கேஜிஎஃப்-2 படத்தில் நடித்த நடிகர் யாஷ் வருகிறார்.

ஐஎம்டிபி தளத்தில் பிரபல இந்திய நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார் என்பதோடு, தமிழகத்தின் இதர உச்ச நட்சத்திரங்களைவிட தனுஷ் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.

சுமார் 20 கோடி பார்வையாளர்களை கொண்டிருக்கும் ஐஎம்டிபி தளம், வாராந்திர தரவரிசை பட்டியலில் முன்னிலை வகிப்போரை தொகுத்து பரிசீலித்ததன் வாயிலாக இந்த 2022-ஆம் ஆண்டின் டாப் 10 பட்டியலை உருவாக்கி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in