`பீஸ்ட் அற்புதமான படமாக இருக்கும்’: புகழும் இந்தி நடிகர்

`பீஸ்ட் அற்புதமான படமாக இருக்கும்’: புகழும் இந்தி நடிகர்
பீஸ்ட்- விஜய்

தான் விஜய்யின் ரசிகன் என்றும் அவர் படங்கள் தனக்குப் பிடிக்கும் என்றும் பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூர் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ வரும் 13-ம் தேதி வெளியாகிறது. யாஷ், சஞ்சய் தத் நடித்துள்ள ’கே.ஜி.எப் சாப்டர் 2’ படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, ஷாகித் கபூர் நடித்துள்ள ’ஜெர்ஸி’ என்ற இந்திப் படமும் வரும் 14-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

விஜய், ஷாகித் கபூர், யாஷ்
விஜய், ஷாகித் கபூர், யாஷ்

இதுபற்றி நடிகர் ஷாகித் கபூர் கூறுகையில், ``நான் நடிகர் விஜய்யின் ரசிகன். அவருடைய படங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் சிறப்பாக நடனம் ஆடுவார். அவர் ஆடுவதை ரசிப்பேன். அவர் நடித்துள்ள பீஸ்ட் கண்டிப்பாக அற்புதமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இருந்தாலும் அந்த படத்துக்கான மார்க்கெட் வேறு. அதனால் அந்தப் படத்தைப் போட்டியாக நினைக்கவில்லை.

ஷாகித் கபூர்
ஷாகித் கபூர்

கே.ஜி.எப் சாப்டர் 2, ரசிகர்கள் ஏற்கெனவே விரும்பிய படத்தின் அடுத்தப் பாகம் என்பதால், அதற்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ராக்கி பாய்க்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அது வேறொரு களத்தைச் சேர்ந்த படம், மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகளை கொண்டிருக்கிறது. ஆனால் ஜெர்ஸி, எமோஷனல் ஸ்போர்ட்ஸ் படம். இதில் குடும்பம் மற்றும் அருமையான மெசேஜ் இருக்கிறது. அதனால் இந்த எல்லா படங்களுக்குமே ஒவ்வொரு இடம் இருக்கிறது என நினைக்கிறேன். பெரிய படங்கள் ஒன்றாக வருவது சிறப்பான ஒன்றுதான். அதை பாசிட்டிவாகத்தான் பார்க்க வேண்டும்'' என்று கூறினார்.

Related Stories

No stories found.