’இப்பலாம் ஹீரோ, வில்லன்னு எதுவும் இல்லை’: அஜித் பட நடிகர் கணிப்பு

’இப்பலாம் ஹீரோ, வில்லன்னு எதுவும் இல்லை’: அஜித் பட நடிகர் கணிப்பு
கபீர் துஹான் சிங்

இப்போது வில்லன் கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று நடிகர் கபீர் துஹான் சிங் கூறியுள்ளார்.

அஜித்தின் வேதாளம், விஜய் சேதுபதியின் றெக்க, லாரன்ஸின் காஞ்சனா 3, விஷாலின் ஆக்‌ஷன் உட்பட சில படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் கபீர் துஹான் சிங். தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களில் நடித்து வரும் அவர், இப்போது ரசிகர்களின் மனநிலை மாறியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

கபீர் துஹான் சிங்
கபீர் துஹான் சிங்

கடந்த ஐந்து வருடமாக தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லனாக நடித்து வருகிறேன். இப்போது தமிழில் ஆலம்பனா, வேட்டையன், சமந்தா நடிக்கும் ஷாகுந்தலம், கன்னடத்தில் உபேந்திரா நடிக்கும் கப்ஸா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். இந்தியில் நவாஸுத்தின் சித்திக்கின் ’போலே சுடியான்’ படத்தில் நடித்திருக்கிறேன். மேலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.

தென்னிந்திய படங்களில் வில்லன் வேடங்களை விரும்பி ஏற்கிறேன். இன்றைய காலகட்டத்தில் வில்லன், ஹீரோ என்று எதுவும் இல்லை.

ரசிகர்கள் வில்லன் வேடங்களையும் ரசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். கே.ஜி.எப், பாகுபலி போன்ற படங்களில் வில்லன் வேடங்களும் பாராட்டப்பட்டது. நாங்கள் களிமண்ணைப் போன்றவர்கள், இயக்குநர்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு கபீர் துஹான் சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in