இளையராஜா இசையில் பாடாதது எனக்கு மகிழ்ச்சிதான்!

- பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாஸ் பேட்டி
இளையராஜா இசையில் பாடாதது எனக்கு மகிழ்ச்சிதான்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் தீவிர ரசிகரான பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர் இசையில் அதிகம் பாடாதது வருத்தம் இல்லை என ‘காமதேனு’ யூடியூப் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்டப் பல மொழிகளில் மூவாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருப்பவர் பாடகர் ஸ்ரீனிவாஸ். அவர் காமதேனு யூடியூப் தளத்திற்குக் அளித்த பேட்டியில் ரஹ்மான் இசை, இளையராஜா இசையில் பாடாதது பற்றியும் இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் பற்றியும் தன்னுடைய இசைப் பயணம் உள்ளிட்ட பல விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

அதிலிருந்து ஒரு பகுதி... ” ’ரோஜா’ படம் நான் போய் பார்த்தது மணி ரத்னத்துடைய இயக்கத்திற்காகத்தான். இசை இளையராஜாவாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், முற்றிலும் வேறான ஒரு புதிய இசையாக இருந்தது. பின்பு கேரளாவில் உள்ள எனக்குத் தெரிந்த இயக்குநர் மூலமாக ரஹ்மானை சந்திக்க வாய்ப்புக் கேட்டேன்.

ரஹ்மான் நான் பாடிய கேசட் எதாவது வேண்டும் என்று கேட்க, ’கேசட் எதுவும் இல்லை, நான் பாத்ரூம் சிங்கர்’ என சொல்லிவிட்டேன். ’அப்போ, உடனே வாங்க’ என ரஹ்மான் கூப்பிட்டார். அப்படிதான் அவர் இசையில் எனக்கு பாட வாய்ப்பு கிடைத்தது. அப்போதே அவரது இசையைக் கேட்டு, இவர் பெரிய ஆளாக வருவார் என்று கணித்தேன்.”

இளையராஜாவின் இசையில் அதிகம் பாடாதது பற்றி கேட்டபோது, “அந்த வருத்தம் நிச்சயம் எனக்குக் கிடையாது. அவரிடம் பாடுவது குறித்து நான் பெருமையாக நினைக்கிறேன். ஆனால், மிக எளிய பாட்டுகூட அவரிடம் பாடுவது கஷ்டம். ஏனெனில், அவரிடம் நமக்கு எப்போதும் பயம் இருக்கும். நன்றாக பாட வேண்டும் என்ற பதற்றம் இருக்கும். அதனால், அவருடைய ரசிகனாக இருந்து அவர் இசையை ரசித்தால் போதும்”. என்றார் ஸ்ரீனிவாஸ்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in