விமான நிலையத்தில் சிக்கிய இளையராஜா: 7 மணி நேரத்திற்குப் பிறகே ஹங்கேரி பயணம்!

விமான நிலையத்தில் சிக்கிய இளையராஜா: 7 மணி நேரத்திற்குப் பிறகே ஹங்கேரி பயணம்!

ஹங்கேரி நடைபெறும் இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை விமான நிலையத்திற்குள் 7 மணி நேரம் சிக்கிக் கொண்டார். வானிலை சரியான பிறகே இளையராஜா தனது பயணத்தைக் காலதாமதமாக மேற்கொள்ள வேண்டியிருந்தது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இரவு முழுக்க பெய்த மழையில், சென்னை விமான நிலையத்தின் ஓடுதளங்களில் தண்ணீர் தேங்கியது.

இதனால் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பி விடப்பட்டன. அதேபோல் சென்னையிலிருந்து கிளம்ப வேண்டிய விமானங்களும் ஓடுதளங்களிலேயே பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் பலரும் விமான நிலையங்களிலேயே பல மணி நேரம் பயணத்திற்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஹங்கேரியில் நடைபெறும் இசைநிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று இரவு இளையராஜா சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். விமானத்திற்காக விஐபி பகுதியில் காத்திருந்திருக்கிறார். மழை காரணமாக அவர் செல்ல வேண்டிய விமானம் புறப்படத் தாமதமாகிக் கொண்டே போனது. இதனால் ஏழு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருப்பு அறையில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார். வானிலை சரியானதும் 7 மணி நேரக் காத்திருப்பதற்குப் பின்னர் இளையராஜா ஹங்கேரி புறப்பட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in