பாரதிராஜாவுக்காக இளையராஜா செய்யும் நெகிழ்ச்சி செயல்... பாராட்டும் ரசிகர்கள்!

இளையராஜா- பாரதிராஜா
இளையராஜா- பாரதிராஜா

திரைத்துறையில் தனது நீண்டகால நண்பரும் இயக்குநருமான பாரதிராஜாவுக்கு இளையராஜா செய்ய இருக்கக்கூடிய செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரசிகர்கள் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜா- பாரதிராஜா
இளையராஜா- பாரதிராஜா

தமிழ் சினிமாவில் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான வெற்றிப்படங்கள் ஏராளம் உண்டு. படங்களில் தொடங்கிய இவர்களது அறிமுகம் அதைத்தாண்டியும் இத்தனை வருட நட்பாக இன்னும் தொடர்கிறது. சமீபத்தில், பாரதிராஜாவின் மகன் மஜோஜ் இயக்குநராக அறிமுகமான ‘மார்கழி திங்கள்’ படத்திலும் இளையராஜா- பாரதிராஜா இருவரும் நீண்ட நாள் கழித்து ஒன்றினைந்தார்கள். இந்த நிலையில், பாரதிராஜாவுக்காக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை இளையராஜா மதுரையில் நடத்த உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜா- பாரதிராஜா
இளையராஜா- பாரதிராஜா

வெறுமனே இசை விழாவாக மட்டுமல்லாது, பாரதிராஜாவுக்கான பாராட்டு விழாவாகவும் இதை நடத்தத் திட்டமிட்டுள்ளாராம் இளையராஜா. இதற்காக தமிழ் சினிமாத்துறையில் சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் எனப் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் வரக்கூடிய பணத்தைத் தனது ஆருயிர் நண்பரான பாரதிராஜாவுக்குக் கொடுக்க உள்ளாராம் இளையராஜா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in