ஒருநாள் கூட நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்காத இளையராஜா!

ஒருநாள் கூட நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்காத இளையராஜா!

நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மாநிலங்களவை உறுப்பினரான இசையமைப்பாளர் இளையராஜா ஒரு நாள் கூட கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். அந்த வகையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்ததால் அவரால் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலையில் மாநிலங்களவை எம்.பி.யாக இளையராஜா பதவியேற்றுக் கொண்டார். தமிழில் பதவியேற்றுக் கொண்ட அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் மேஜையை தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மாநிலங்களவை உறுப்பினரான இசையமைப்பாளர் இளையராஜா ஒரு நாள் கூட கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு மாநிலங்களவை வருகைப்பதிவேடே சாட்சியாகும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in