`சாமானியன்’ படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கும் இளையராஜா- ராமராஜன் கூட்டணி!

`சாமானியன்’ படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கும் இளையராஜா- ராமராஜன் கூட்டணி!

’சாமானியன்’ படத்திற்காக இளையராஜா- ராமராஜன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் எண்பதுகளின் காலக்கட்டத்தில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் ராமராஜன். சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தவர் தற்போது ‘சாமானியன்’ படம் மூலமாக கம்பேக் கொடுக்கிறார். இந்தப் படம் குறித்தான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. நடிகர்கள் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில், ‘சாமானியன்’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ராமராஜனின் ‘கரகாட்டக்காரன்’, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ உள்ளிட்டப் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்களும் இப்போது வரைக்கும் ரசிகர்களுக்குப் பிடித்தப் பாடல்களாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 23 வருடங்களுக்குப் பிறகு ‘சாமானியன்’ படத்திற்காக இளையராஜா- ராமராஜன் கூட்டணி ஒன்றிணைந்து இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in