இயக்குநர் சீனு ராமசாமி மீது கடுப்பான இளையராஜா: காரணம் இது தானா?

இயக்குநர் சீனு ராமசாமி மீது கடுப்பான இளையராஜா: காரணம் இது தானா?

இயக்குநர் சீனு ராமசாமி ‘மாமனிதன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் சீனு ராமசாமி பேசுகையில், "இளையராஜா இந்த படத்தின் பாடல் கம்போஸிங் போது என்னை அவருடைய அலுவலகத்திற்குள்ளே அனுமதிக்கவில்லை. இந்த படத்தின் இயக்குநர் நான்தான் என்று கூறியும் செக்யூரிட்டி என்னை அனுமதிக்கவில்லை" என்று அவர் கண்ணீருடன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் பாடல் எழுதிய கவிஞர்கள் கூட பாடல் வரிகளைத் தனக்குக் காண்பிக்க தயங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா இப்படி செய்வதற்கு தற்போது ஒரு காரணம் கூறப்படுகிறது. சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார்.

அதில் அவர், இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரையும் சேர்த்து வைக்க போவதாக பதிவிட்டிருந்தார். இதுதான் இளையராஜாவின் கோபத்திற்குக் காரணமாம். இளையராஜா, வைரமுத்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கின்றனர். அது புரியாமல் சீனு ராமசாமி அப்படி கூறியது தான் இளையராஜாவை அதிகமாக கோபப்பட வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in