ஆம்ஸ்டர்டாம் பட விழாவில் இளையராஜாவுக்கு விருது

ஆம்ஸ்டர்டாம் பட விழாவில் இளையராஜாவுக்கு விருது

ஆம்ஸ்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில், சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் உருவாகியுள்ள படம், ’எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’. இதை கன்னட பட இயக்குநர் அஜித் வாசன் உஜ்ஜினா இயக்கியுள்ளார். இங்கிலாந்தை மையமாகக் கொண்டு செயல்படும், 5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இது அவருடைய, 1422-வது படம்.

இந்தப் படத்தில், கிரிஷ் நாயகனாகவும், மாட்டில்டா நாயகியாகவும் நடித்துள்ளனர். லண்டனில் இருந்து இந்தியா வரும் காதலர்கள், இங்கு சில நாள்கள் வாழ்ந்தப்பிறகு பிரிந்து விட நினைக்கின்றனர். அப்போது அவர்கள் வசிக்கும் வீட்டில் இருக்கும் பேய்களுடன் பேசியப் பின், மீண்டும் இணைய முடிவு எடுக்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. இரு கேரக்டர்களை மட்டுமே வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதில், சிறந்த இசைக்கான விருது இளையராஜாவுக்கு கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in