`அன்பு மட்டுமே மாறாதது’- ஐஸ்வர்யாவை சந்தித்தது குறித்து இளையராஜா ட்வீட்

இளையராஜாவுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இளையராஜாவுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து ட்வீட் செய்துள்ள இசை அமைப்பாளர் இளையராஜா, ``அன்பு மட்டுமே மாறாதது'' என்று கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடிப்பில் `3' என்ற படத்தை இயக்கினார். அடுத்து, `வை ராஜா வை' படத்தை இயக்கினார். சமீபத்தில் ’முசாபிர்’ என்ற இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டார். இந்த ஆல்பம், தமிழில் `பயணி' என்று பெயரில் வெளியானது. இதையடுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்திப் படத்தை இயக்க இருக்கிறார். இதை மீனு அரோரா தயாரிக்கிறார். இவர், அமிதாப்பச்சன் நடித்து சமீபத்தில் வெளியான ’ஜுண்ட்’ (‘Jhund) படத்தை தயாரித்தவர்.

இளையராஜாவுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இளையராஜாவுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இந்நிலையில் இசை அமைப்பாளர் இளையராஜாவை நேற்று நேரில் சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அவருடைய அடுத்த படத்தில் இளையராஜா இசையமைக்கலாம் என்று இந்தச் சந்திப்புப் பற்றிக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐஸ்வர்யாவுடனான சந்திப்பு குறித்து இளையராஜா ட்விட்டரில் கூறியுள்ளார். அதில், ``உங்களை சந்தித்து நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சி. ஒருவர் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடக்கலாம். ஆனால், ஒரு விஷயம் மட்டும் என்றும் மாறாமல் அப்படியே இருக்கும். அது அன்பு மட்டுமே. கடவுள் ஆசிர்வதிக்கட்டும். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்'' என்று கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த மாதம் ராகவா லாரன்ஸையும் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in