இளையராஜாவின் அந்த அறிவிப்பு: ரசிகர்கள் மகிழ்ச்சி

இளையராஜா
இளையராஜா

’ஹவ் டு நேம் இட்’ இசை ஆல்பத்தின் 2-ம் பாகம் வெளிவர இருப்பதாக, இசை அமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளதை அடுத்து அவர் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

1986-ம் ஆண்டு இளையராஜா வெளியிட்ட இசை ஆல்பம், ’ஹவ் டு நேம் இட்’. வார்த்தைகள் இல்லாமல் வயலின், புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளை மட்டும் வைத்து இசைக்கப்பட்டிருக்கும் இந்த ஆல்பம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இதன் 2-ம் பாகத்தை விரைவில் வெளியிட இருப்பதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில், இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதில் அவர், “திரைப்படங்களில் பாகம் 1, பாகம் 2, பாகம் 3 என்று வருகிறதில்லையா? சூப்பர்மேன் 1, சூப்பர்மேன் 2, சூப்பர் மேன் 3 அப்படின்னு வருது. பேட்மேன் 1, 2, 3-ன்னு வரிசையா வருது. இந்த மாதிரி ஏன் மியூசிக்ல வரக்கூடாதுன்னு ஒரு எண்ணம் வந்தது. அதனால, 'ஹவ் டூ நேம் இட்' பாகம் - 2 சீக்கிரமாகவே வரப்போகுது” என்று தெரிவித்துள்ளார். இளையராஜாவின் இந்த அறிவிப்பு இசை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in