வாழ்க்கையில் போராடும் இளைஞர்தான் என் காதலனாக வேண்டும்! - பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சாந்து

வாழ்க்கையில் போராடும் இளைஞர்தான் என் காதலனாக வேண்டும்! - பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சாந்து
ஹர்னாஸ் சாந்து

கடந்த டிசம்பர் 12-ம் தேதி, இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற உலக பிரபஞ்ச அழகிப் போட்டியில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹர்னாஸ் கவுர் சாந்து வெற்றிபெற்றார். மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, அவர் பல ஊடகங்களில் பேட்டியளித்துவந்தார்.

இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், “நான் ஒரு பணக்காரரைக் காதலிப்பதை விட வாழ்க்கையில் முன்னேறக் கடுமையாகப் போராடும் ஒரு இளைஞரைக் காதலிக்க விரும்புகிறேன். ஏனென்றால், நானும் வாழ்க்கையில் மன்றாடிதான் பிரபஞ்ச அழகிப் போட்டியில் வெற்றிபெற்றேன். இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். வாழ்க்கையில் போராட்டம் அவசியம் என நான் நம்புகிறேன். அப்போதுதான் நம்முடைய சாதனைகளுக்கு நாம் மதிப்பளிக்க முடியும். திரைப்படங்களில் நடித்தாலும் வழக்கமான பெண் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை. பெண்கள் குறித்து சமூகம் கொண்டிருக்கும் புதுப்பார்வையைக் கேள்வி கேட்கும் வலிமையான பெண் கதாபாத்திரங்களில்தான் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் ஹர்னாஸ் சாந்து.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in