ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ராஷ்மிகா மந்தனா

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா

’புஷ்பா’ படத்தில் இடம்பெற்றுள்ள ’சாமி சாமி’ பாடலை மெகா ஹிட் ஆக்கியதற்காக. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

அல்லு அர்ஜுன் நடித்து சூப்பர் ஹிட்டாகி இருக்கும் படம், ’புஷ்பா’. நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். பகத் பாசில், சுனில், அஜய் கோஷ், மைம் கோபி உட்பட பலர் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் தெலுங்கு மட்டுமின்றி, இந்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பாடல்களுமே ஹிட்டாகி உள்ள நிலையில், ராஷ்மிகா ஆடி நடித்துள்ள ’சாமி சாமி’ என்ற பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தப் பாடலின் சில நடன அசைவுகளை ரசிகர்களும் செய்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். அதைக் கண்ட நடிகை ராஷ்மிகா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவர், “சாமி சாமி பாடலுக்கு கிடைத்த வரவேற்பு அலாதியானது. அதை வெற்றிகரமான பாடலாக மாற்றியதற்கு ரசிகர்களுக்கு நன்றி. கடந்த சில நாட்களாக, இந்தப் பாடலில் நான் ஆடியுள்ள ஹூக் ஸ்டெப்பை ரசிகர்களும் செய்வதைப் பார்க்கிறேன். இது என்னை ’புஷ்பா’ படப்பிடிப்பு நாட்களுக்கு இழுத்துச் செல்கிறது. உலகெங்கும் இருக்கும் ரசிகர்களிடம் இருந்து நான் பெற்றுள்ள அன்பு, இந்தப் பாடலை சிறப்பானதாகவும் மறக்க முடியாததாகவும் மாற்றி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in