பான் இந்தியா முத்திரை தேவையில்லை: நடிகர் விஜய் சேதுபதி

பான் இந்தியா முத்திரை தேவையில்லை: நடிகர் விஜய் சேதுபதி

தனக்கு பான் இந்தியா முத்திரை தேவையில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.

விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து வெற்றிமாறனின் விடுதலை, இந்தியில் மெர்ரி கிறிஸ்துமஸ் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

’விக்ரம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தேன். லோகேஷ் கனகராஜ் சக்தி வாய்ந்த கேரக்டராக அதைப் படைத்திருந்தார். அந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தபோது, ஒரு சகோதரராக தனது பழைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அது விலைமதிப்பற்றது. எந்த விதமான கேரக்டர்களிலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், அந்த கேரக்டர், ரசிகர்களுக்குப் பிடிக்குமா என்பதைப் பார்ப்பேன்.

பான் இந்தியா பற்றி கேட்கிறார்கள். ஒரு படம் நன்றாக இருந்தால் மொத்த உலகமும் அதைப் பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அனைத்து மொழிகளிலும் நடிக்கும் ஆசை இருக்கிறது. அதற்கு பான் இந்தியா முத்திரை வேண்டும் என்று நினைத்த தில்லை. பாகுபலி, கே.ஜி.எஃப், புஷ்பா, ஆர்ஆர்ஆர், விக்ரம் போன்ற படங்கள் அனைத்து மொழிகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், அனைத்துப் படங்களும் அப்படி ஏற்றுக் கொள்ளப்படும் என்று நினைக்கவில்லை. நான் எப்படி கதைத் தேர்வு செய்கிறேன் என்றால், அந்தக் கதை கேட்கும்போதே என்னை உற்சாகப்படுத்த வேண்டும், அது பார்வையாளர்களை மகிழ்விக்குமா? என்று பார்ப்பேன். அதற்குப்பிறகே ஒப்புக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in