'மாமியார் வீட்டின்' பெருமையை மெச்சும் வகையில் பணியாற்றுவேன்: அமைச்சர் ரோஜா

'மாமியார் வீட்டின்' பெருமையை மெச்சும்  வகையில் பணியாற்றுவேன்: அமைச்சர் ரோஜா

" மாமியார் வீடான தமிழகத்தின் பெருமையை மெச்சும் வகையில் தாய்வீடான ஆந்திராவில் சிறப்பாக பணியாற்றுவேன்" என்று அமைச்சர் ரோஜா கூறினார்.

ஆந்திரா மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகை ரோஜா. இவர் ஆந்திர மாநில அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் விளையாட்டு இளைஞர் நலன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் பதவியேற்ற பின் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய இன்று வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," தாய்வீடான ஆந்திராவில் என்னை அமைச்சராக்கியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. மாமியார் வீடான தமிழகத்தின் பெருமையை மெச்சும் வகையில் தாய்வீடான ஆந்திராவில் சிறப்பாக பணியாற்றுவேன்" என்றார். அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in