வெளியானது ‘லால் சலாம்’ டீசர்... ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த அப்டேட்!

 நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

வரும் பெங்கல் அன்று உங்களையெல்லாம் நான் சந்திக்கிறேன் என ’லால் சலாம்’ படத்தின் டீசர் வெளியிட்டு, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு ’லால் சலாம்’ எனும் ஒரு படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, சென்னை, மும்பை ஆகியப் பல இடங்களில் நடைபெற்று முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிகழ்ந்துள்ளன. இப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் 2024ம் ஆண்டு பொங்கலன்று வெளியாகிறது. லால் சலாம் படத்தின் இசை வெளியீடுடிசம்பர் இரண்டாவது வாரத்தில், ரஜினியின் பிறந்தநாளையொட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் படத்தின் டீஸர் காட்சிகளை இன்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். வரும் பொங்கல் அன்று உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன், லால் சலாம்’’ என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in