'நான் உன்னை நீங்க மாட்டேன்'- சர்ச்சைக்கு பின் இளையராஜா முதல் ட்வீட்

'நான் உன்னை நீங்க மாட்டேன்'- சர்ச்சைக்கு பின் இளையராஜா முதல் ட்வீட்

இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், தனது குரலில் ஒலிக்கும் 'நான் உன்னை நீங்க மாட்டேன்' என பாடலை பதிவிட்டுள்ளார். சர்ச்சைக்கு பின்னர் இளையராஜா முதல் ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.

டெல்லியில் உள்ள புளூகிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம், 'மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டது. இந்தப் புத்தகத்தின் முன்னுரையில், பிரதமர் மோடி அம்பேத்கருக்கு இணையானவர் என்றும் பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முத்தலாக் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்" எனவும் கூறியிருந்தார். இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டிருந்த இளையராஜாவின் முன்னுரை கடந்த சில நாள்களாக கடும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பின் இளையராஜாவின் ஒரு ட்வீட்டை தற்போது பதிவிட்டுள்ளார். அதில், ரஜினி நடித்த தளபதி படத்திலிருந்து சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலின், “நான் உன்னை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவே“ என்ற வரிகளை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அசல் பாடல் வரிகளில் சில மாற்றங்களைச் செய்து, "பாடுவேன் உனக்காகவே... இந்த நாள் நன்னாள் என்று பாடு... என்னதான் இன்னும் உண்டு கூறு" என்று வரிகளைச் சேர்த்துப் பாடியிருக்கிறார்.

இளையராஜாவின் இந்தப் பாடல் பதிவேற்றம் குறித்து கலவையான கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in