`மக்கள் கூப்பிட்டால் அரசியலுக்கு வருவேன்; தமிழக ஆட்சி சிறப்பாக இருக்கு'- லெஜண்ட் சரவணன் அதிரடி

`மக்கள் கூப்பிட்டால் அரசியலுக்கு வருவேன்; தமிழக ஆட்சி சிறப்பாக இருக்கு'- லெஜண்ட் சரவணன் அதிரடி

மக்களும் மகேசனும் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என்று கூறிய நடிகர் லெஜண்ட் சரவணன், தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்றார்.

தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். இரட்டை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான தி லெஜண்ட் படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். யாஷிகா ஆனந்த், ராய் லக்‌ஷ்மி உள்ளிட்ட பிரபல நடிகைகள் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டிருந்தனர். தற்போது அடுத்த படத்துக்கு அவர் தயாராகி வருகிறார்.

இந்த நிலையில், கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய லெஜண்ட் சரவணன், சென்னை எப்படி வளர்ச்சி அடைந்திருக்கிறதோ அதேபோல் கோயமுத்தூரும் வளர்ச்சி அடைந்திருக்கிறது. சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி கோயம்புத்தூர் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளிவரும்.

தான் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் கூப்பிட்டால் அரசியலுக்கு வரவேன். இன்றைய அரசியல் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நடக்கும் ஆட்சி சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது" என்றார் அதிரடியாக.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in