த்ரிஷாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன்... தெறிக்கவிடும் மன்சூர் அலிகான்!

த்ரிஷா - மன்சூர் அலிகான்
த்ரிஷா - மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகானுடன் இனிமேல் இணைந்து நடிக்க மாட்டேன் என த்ரிஷா கூறியுள்ள நிலையில், அவருடன் இணைந்து நடிப்பேன் என மன்சூர் அலிகான் கூறியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நடிகர் மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான்

நடிகை த்ரிஷாவைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியதை அடுத்து அவர் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்ப்பு வலுத்தது. மேலும், அவருக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதுமட்டுமல்லாது, அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதனை ஒட்டி இன்று காலை சென்னையில் தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் மன்சூர் அலிகான்.

த்ரிஷா
த்ரிஷா

இதில் தான் தவறு எதுவும் செய்யவில்லை எனவும் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் பேசினார். மேலும், நடிகர்கள் சங்கம் தனக்கு அனுப்பியுள்ள கண்டனத்திற்கு எச்சரிக்கை விடுத்த அவர், அதை வாபஸ் பெற வேண்டும் என்றும் பேசினார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை த்ரிஷா ட்வீட் செய்த போதே, மன்சூர் அலிகானுடன் இனி வரும் நாட்களில் இணைந்து நடிக்க மாட்டேன் எனக் கூறியிருந்தார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஒரு நடிகனின் கதாபாத்திரமாக அந்தக் காட்சியை நான் சாதாரணமாகக்தான் சொன்னேன். தவறாக எதுவும் சொல்லவில்லை. த்ரிஷாவுடன் கண்டிப்பாக அடுத்தப் படத்தில் நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது... 4 மணி நேரம் அவகாசம் தர்றேன்... நடிகர் சங்கத்தை எச்சரித்த மன்சூர் அலிகான்!

உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ

பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!

ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in