`நம்மவர்' படத்தில் ரிஜெக்ட் ஆனேன்; இப்போது கமல் சாருடன் நடிக்கிறேன்'- விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

`நம்மவர்' படத்தில் ரிஜெக்ட் ஆனேன்; இப்போது கமல் சாருடன் நடிக்கிறேன்'- விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

நடிகர் கமலஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "கமல் 60 பங்ஷன் அப்போ, கமல் சார் முன்னாடி அவர்கூட நடிக்கணும் என்று கேட்டேன். இப்போ அது நடந்துருச்சு. அடுத்து ஒரு வேண்டுகோள் சார். உங்க டைரக்சன்ல நடிக்கணும்னு ஆசை சார். 13 வயசுல கமல் சாரோட நம்மவர் படத்துல நடிக்கிறதுக்கு போய் ரிஜெக்ட் ஆனேன். இப்போ சேர்ந்து நடிச்சது நான் செஞ்ச புண்ணியமா, என் பாட்டன் செஞ்ச புண்ணியமான்னு தெரில" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

நடிகர் சிம்பு பேசுகையில், "கமல் 50 நடந்த போது நான் மேடையில் ஏறி பேச முடியவில்லை என வருத்தமா இருந்துச்சு. அது இப்போது நிறைவேறி இருக்கு. அப்பா ஆப்-ஸ்கீரின்ல எப்படியோ அது மாதிரி கமல் சார் எனக்கு ஆன் ஸ்கீரின் குரு. விஸ்வரூபம் படம் பிரச்சினையின் போது, எதுக்குமே எழுந்து ஓட மாட்டேன். ஆனால் அன்னிக்கு கமல் சார் கூடவே இருந்தேன். இந்த படம் டிரெய்லர் சூப்பரா இருந்தது. ஒவ்வொருமுறை கமல் சார் படம் வரும்போது என்னை கூப்பிடுவாரு. ஒரு தடவை 'படம் நல்லா இருக்கு, ஆனா ஓடுமான்னு தெரியல' எனச் சொன்னேன். இன்னொரு தடவ 'எனக்கு படம் பிடிக்கல. ஆனால் சூப்பர் ஹிட் ஆகும்னு' சொன்னேன். கமல் சார் சிரிச்சாரு. இந்த படத்தை பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. டிரெய்லர் மட்டும்தான் பார்த்தேன். ஆனால் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும்னு சொல்றேன்`` என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in