வெற்றி எதையும் கற்றுத்தரவில்லை… தவறுகளில் இருந்தே கற்றுக்கொள்கிறேன்: நடிகர் சுதீப் பளிச் பதில்!

வெற்றி எதையும் கற்றுத்தரவில்லை… தவறுகளில் இருந்தே கற்றுக்கொள்கிறேன்: நடிகர் சுதீப் பளிச் பதில்!

இயக்குநராக வேண்டும் என்பதற்காகவே சினிமாவுக்கு வந்தேன் என்று நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழில் 'நான் ஈ', 'புலி', 'முடிஞ்சா இவனப்புடி' படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது, ’விக்ராந்த் ரோணா’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். அனுப் பண்டாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி , நீதா அசோக் உட்பட பலர் நடித்துள்ளனர். ஃபேண்டஸி ஆக்‌ஷன் அட்வெஞ்சர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், 3டி-யில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. வரும் 28-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் பற்றி பேசிய நடிகர் சுதீப் கூறியதாவது:

இந்தப் படம் பற்றி பேசிய நடிகர் சுதீப் கூறுகையில், " இந்தப் படம் நிச்சயமாக புதுக் கதைக் களம். நான் நடித்துள்ள ஒவ்வொரு கேரக்டருக்கும் அதற்கான இடம் இருக்கிறது. இந்தப் படமும் அப்படித்தான். எல்லோரும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நான் இயக்குநர் ஆக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். நடிகனாகி விட்டேன். பிறகு ஆறு படங்களை இயக்கி இருக்கிறேன். இதன் மூலம் அடுத்தக் கட்டத்துக்கு சென்றிருக்கிறேன்.

என் சினிமா பயணம் எளிதானதல்ல என்பதில் எனக்குப் பெருமை. தடைகளின்றி விரைவில் நட்சத்திரங்களாக மாறும் அதிர்ஷ்டம் சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. சினிமாவில் நான்பட்ட கஷ்டங்கள், என் சொத்து. உங்கள் பயணத்தில் நினைவில் இருப்பது எது என்று கேட்டால், என் போராட்டங்கள் என்பேன். நல்ல விஷயங்கள் எப்போதும் எதையும் கற்றுத்தரவில்லை. வெற்றி எதையும் கற்றுத்தரவில்லை. தவறுகளில் இருந்தே கற்றுக்கொள்கிறேன். அப்படித்தான் கற்றுக்கொண்டேன். கஷ்டங்களும் தடைகளும்தான் என்னை வலிமையாக்கியது" என்று சுதீப் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in