`ஆதித்த கரிகாலன் போல ஒரு கதாபாத்திரத்துக்கு ஆசைப்பட்டேன்’- நடிகர் பிரசன்னா!

`ஆதித்த கரிகாலன் போல ஒரு கதாபாத்திரத்துக்கு ஆசைப்பட்டேன்’- நடிகர் பிரசன்னா!

``ஆதித்த கரிகாலன் போல ஒரு கதாபாத்திரம் செய்ய ஆசைப்பட்டேன்'' என நடிகர் பிரசன்னா மனம் திறந்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ‘ஜெயம்’ ரவி ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கக்கூடிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இந்த மாத இறுதியில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாக இருக்கிறது. இப்போது பட புரோமோஷனுக்காக சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு என படக்குழு பயணித்துக் கொண்டிருக்கிறது.

படம் குறித்து நடிகர் விக்ரம் பகிர்ந்துள்ள ட்விட் ஒன்றை நடிகர் பிரசன்னா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து சொன்னதுடன் ‘நான் நடிகராக வேண்டும் என கனவு காண ஆரம்பித்ததில் இருந்து, இதுபோன்ற ஒரு போர்வீரனாக குதிரையில் ஏற வேண்டும் என விருப்பப்பட்டிருக்கிறேன்.

இதில் நடிகர் விக்ரமை பார்க்கும் போது என்னையே பார்ப்பது போல உள்ளது. என்னுடைய இந்தப் போர்வீரன் கனவு என்றாவது ஒருநாள் நனவாக வேண்டும் என ஆசைப்படுகிறேன். ’சியான்’ விக்ரம் இந்தக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்’ என தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரசன்னாவின் இந்த ட்வீட்டுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விக்ரம், சீக்கிரம் அவரது இந்தக் கனவு நிறைவேறும் என வாழ்த்தியுள்ளார். தற்போது, நடிகர் பிரசன்னா விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன்2’ படத்தைக் கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in