’தண்ணியடிச்சிட்டு பண்ணின தவறுகளைச் சொல்ல மாட்டேன்’: நடிகை பகீர்

’தண்ணியடிச்சிட்டு பண்ணின தவறுகளைச் சொல்ல மாட்டேன்’: நடிகை பகீர்
காயத்ரி சுரேஷ்

மதுபோதையில் நான் செய்த தவறுகளை இப்போது சொல்ல விரும்பவில்லை என்று நடிகை ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல மலையாள நடிகை காயத்ரி சுரேஷ். ‘ஒரே முகம்’, ‘ஒரு மெக்சிகன் அபரதா’, ‘சகாவு’, ‘நாம்’, ‘சில்ரன்ஸ் பார்க்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கும் நடிகைகளுள் அவரும் ஒருவர். இதனால் சமூக வலைதளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட நடிகையும் அவர்தான். சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவிக்கும் அவர், ஒரு காலத்தில் மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

காயத்ரி சுரேஷ்
காயத்ரி சுரேஷ்

இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், “ஒரு காலத்தில் மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். பிறகு தொழில், வாழ்க்கை, என் தோற்றம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக நிறுத்த முடிவு செய்தேன். மது குடித்துவிட்டு நான் செய்த தவறுகளைப் பற்றி மட்டும் கேட்காதீர்கள். அவற்றை சுய நினைவோடு நான் செய்யவில்லை. அதை இப்போது சொல்வதும் சரியாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

காயத்ரி சுரேஷ்
காயத்ரி சுரேஷ்

காயத்ரி சுரேஷுடன் ’மஹே’ என்ற படத்தில் நடித்த அனீஷ் மேனன் மீது இளம் பெண் ஒருவர் ‘மி டூ’ புகார் கூறியுள்ளார். அது குறித்து கேட்டபோது, “அதுபற்றி கேள்விப்பட்டேன். ஆனால், நாம் கேள்விப்படுவது அனைத்தும் உண்மையல்ல. நான் அவருடன் பலநாட்கள் பணியாற்றி இருக்கிறேன். மி டூ விவகாரம் பற்றி நான் கருத்துச்சொன்னால், அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும். அதனால், அதுபற்றி ஏதும் சொல்லவிரும்பவில்லை” என்றார் காயத்ரி.

Related Stories

No stories found.