`அம்மா திரும்பி வருவார் என்று நினைத்தேன்’- வடிவேலு உருக்கம்!

`அம்மா திரும்பி வருவார் என்று நினைத்தேன்’- வடிவேலு உருக்கம்!

``என் அம்மா நலமுடன் திரும்பி வருவார் என்று நினைத்தேன்'' என நடிகர் வடிவேலு உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி இன்று உடல்நலக் குறைவால் மதுரையில் காலமானார். இவரது இறுதிச்சடங்கு மதுரையில் நடைபெற்று வருகிறது. தனது தாயார் மறைவு குறித்து நடிகர் வடிவேலு ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டதாவது, ``பொங்கல் பண்டிகையை கொண்டாடத்தான் நான் ஊருக்கு வந்தேன். அம்மாவுக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நலமுடன் சீக்கிரம் திரும்பி வந்துவிடுவார் என நினைத்தேன். ஆனால், பண்டிகை எல்லாம் முடித்துவிட்டு எங்களுக்கு எந்த தொந்தரவும் தராமல் போய் விட்டார். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார். அழகிரி, பூச்சிமுருகன் ஆகியோர் நேரில் வந்து ஆறுதல் கூறினர்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் தங்களது ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in