`நடிப்பு, சலிப்பை ஏற்படுத்தும்னு நினைச்சிருந்தேன்’-செல்வராகவன்

`நடிப்பு, சலிப்பை ஏற்படுத்தும்னு நினைச்சிருந்தேன்’-செல்வராகவன்

’சாணிக் காயிதம்’ படத்தில் நடிக்கும்வரை, நடிப்பு சலிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன்'' என இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.

கீர்த்தி சுரேஷுடன் இணைந்து இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ள படம், ’சாணிக் காயிதம்’. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சங்கையா என்ற கேரக்டரில் செல்வராகவன் நடித்துள்ளார்.

கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்), தனது ஐந்து வயது மகள், தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் அவர் கணவர் மாரி ஆகியோருடன் சேர்ந்து வாழ்கிறார். துரதிர்ஷ்டவசமான இரவொன்றில் அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, செல்வராகவன் ஆதரவைப் பெறுகிறாள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது கதை.

’சாணிக் காயிதம்’- செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்
’சாணிக் காயிதம்’- செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்

இந்தப் படத்தில் நடித்துள்ளது பற்றி இயக்குநர் செல்வராகவன் கூறும்போது, ‘’நான் இயக்குநராக இருக்கும் காலத்தில் இருந்தே நேரத்தைப் பார்த்து வேலை செய்வது கூடாது என்ற கொள்கை எனக்கு இருந்தது. செய்யும் பணியில் முழு கவனத்தோடு செயல்படும்போது நேரம் போவதே தெரியாது. அனைத்தும் என் விருப்பப்படி நடந்த பிறகுதான் பேக்கப் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்வேன். இது அனைத்துப் பணிகளுக்கும் பொருந்தும். நடிப்பது, சலிப்பு ஏற்பத்துவதாகவே இருக்கும் என்று முதலில் நினைத்திருந்தேன். ஆனால் இதில் நடிக்கும்போதுதான் அது ஒவ்வொரு நாளும் பல விஷயங்களைக் கற்பிப்பதாக இருந்தது” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in