`டான்' படம் பார்த்தேன், ஆனால்..'- ராமதாஸ் சொல்லும் முக்கிய மெசேஜ்

`டான்' படம் பார்த்தேன், ஆனால்..'- ராமதாஸ் சொல்லும் முக்கிய மெசேஜ்

`டான்' படம் குறித்து முக்கிய மெசேஜ்ஜை மக்களுக்கு கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் `டான்'. இந்த படத்தில் பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கடந்த மே மாதம் இந்த மாதம் வெளியானது. பிடிக்காத பொறியியல் படிப்பைத் தனது தந்தைக்காகப் படிக்கும் கல்லூரி 'டான்' மாணவன் ஒருவன் தனக்கான லட்சியத்தை அடைந்தானா, தனது தந்தையின் அன்பைப் புரிந்துகொண்டானா என்பதுதான் கதை.

படத்தின் கலகலப்பான முதல் பாதியும், இரண்டாவது பாதியில் வரும் அப்பா சென்டிமென்டும் கதை ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற காரணமாக அமைந்தன. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் வெளியான 12 நாட்களிலேயே உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இந்நிலையில், டான் படம் குறித்து ராமதாஸ் முக்கிய மெசேஜ்ஜை மக்களுக்கு கூறியுள்ளார். அதில், "நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)” என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in