`உங்களை விரைவில் சந்திக்கிறேன்'- பிக்பாஸ் விக்ரமன் வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் விக்ரமன்
பிக்பாஸ் விக்ரமன் `உங்களை விரைவில் சந்திக்கிறேன்'- பிக்பாஸ் விக்ரமன் வெளியிட்ட வீடியோ

``எனக்கு வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் உங்களை சந்திக்கிறேன்" என்று பிக்பாஸ் விக்ரமன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த பிக்பாஸ்6 சீசனில் 21 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். கடைசியாக விக்ரமன், அஸிம் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை யார் வெற்றியாளர் என்ற போட்டி நடைபெற்றது. இதில் வெற்றியாளராக அஸிம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. அதே நேரத்தில் விக்ரமனுக்கு முதல் பரிசு கொடுக்காதது ஏன்? என்று சமூக வலைதளங்களில் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

இந்த நிலையில் விக்ரமன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பேசும் அவர், "எல்லோருக்கும் நான் மிகப்பெரிய நன்றியை சொல்ல வேண்டும். எனக்கு எவ்வளவு ஆதரவு அளித்தீர்கள் என்பதை வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகுதான் என்னால் உணர முடிந்தது. அவ்வளவு அன்பும் ஆதரவும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் காண்பித்து இருக்கிறீர்கள். உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், பொங்கல் அன்று தாய்மார்கள் தங்கள் வீட்டில் போட்டா கோலத்தில் அறம் வெல்லும் அப்படி என்று சேர்த்து போட்டு இருக்கிறீர்கள். இதைவிட பெரிய வெற்றி எனக்கு எது வந்து விடும்.

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்க அன்புக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் உங்கள் மனநிலை என்ன என்பதை நான் உணர்கிறேன். இது ஒரு நன்றி சொல்வதற்கான வீடியோ மட்டுமல்ல நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என்னவென்றால், உங்கள் எல்லோரையும் சந்திக்க ஆசைப்படுகிறேன். அந்த சந்திப்பு மிக விரைவில் நடக்கப்போகிறது. எப்போது என்பதை நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். மறுபடியும் சொல்கிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. அறம் வெல்லும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in