நடிகர் சரத்குமாருக்கு கரோனா பாதிப்பு!

நடிகர் சரத்குமாருக்கு கரோனா பாதிப்பு!
நடிகர் சரத்குமார்

நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருந்தாலும் திரையுலக பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் குணமடைந்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், என்னுடன் தொடர்பில் இருந்து அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in