எனக்குத் திருமணம் செய்யும் எண்ணமில்லை: பிரேம்ஜி அமரன்

எனக்குத் திருமணம் செய்யும் எண்ணமில்லை: பிரேம்ஜி அமரன்

தனக்குத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை என்று நடிகரும் இசை அமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் தெரிவித்துள்ளார்.

பிரபல இசை அமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி அமரன். இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பி. சென்னை 28, சந்தோஷ் சுப்ரமணியம், சரோஜா, மங்காத்தா, மாநாடு உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், சில படங்களுக்கு இசை அமைத்தும் இருக்கிறார்.

பிரேம்ஜி அமரன், வினய்தா
பிரேம்ஜி அமரன், வினய்தா

இவரும், ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி உட்பட பல படங்களில் பின்னணி பாடியுள்ள வினய்தாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இதை நடிகர் பிரேம்ஜி அமரன் மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "எனக்குத் திருமணம் செய்யும் எண்ணமில்லை. இருந்திருந்தால் 10 வருடத்துக்கு முன்பே திருமணம் செய்திருப்பேன். என் வாழ்வில் திருமணம், குழந்தைகள் போன்ற விஷயங்கள் கிடையாது. அதில் நான் தெளிவாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in