நான் எப்போதும் ஹீரோதான்: கே.பாக்யராஜ் பேச்சு

நான் எப்போதும் ஹீரோதான்: கே.பாக்யராஜ் பேச்சு

``நான் எப்போதும் ஹீரோதான்'' என்று நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

சிவ மாதவ் இயக்கத்தில், 21 வருடங்களுக்கு பிறகு பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள படம் '3.6.9'. இதை, பிஜிஎஸ் சரவணகுமார் தயாரித்துள்ளார். மாரீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ஹர்ஷா இசை அமைத்துள்ளார்.

கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. 24 கேமரா ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்பக் கலைஞர்கள் பங்கேற்க, 75க்கும் மேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமான இதன் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

3.6.9 பட பாடல் வெளியீட்டு விழா
3.6.9 பட பாடல் வெளியீட்டு விழா

விழாவில், இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் பேசுகையில், `` 21 வருஷம் ஆச்சு என்று சொல்லி என்னையே சங்கடப்படுத்தி விட்டார்கள். படத்தில் ஸ்கீரினில் வர்றவர்தான் ஹீரோவா? கதை, திரைக்கதை, எல்லாம் சும்மாவா? அது இருந்தால்தான் ஹீரோ. நான் அவ்வப்போது நடித்துகொண்டு தான் இருக்கிறேன். நான் எப்போதும் ஹீரோதான். நான் இதுவரை கிறிஸ்தவர் கெட்டப் போட்டதில்லை. இந்தப்படம் தான் முதல் முறை. இப்படம் சயின்ஸ் பிக்சன் என்றார்கள். இவர்கள் திட்டமிட்டது எல்லாம் பார்க்க பிரமிப்பாக இருந்தது. 81 நிமிடம் தான் எடுப்பார்கள் என்பதால் 3 நாள் ரிகர்சல் செய்தார்கள். யாராவது சொதப்பினால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது. ஆனால் இவர்கள் ஒரு மாதம் ரிகர்சல் செய்து வந்திருந்தார்கள். கச்சிதமாக எடுத்தார்கள். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும்" என்றார்.

விழாவில் நடிகர் ஆரி, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமனண் உட்பட பலர் பேசினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in