
தற்கொலை குறித்து 20, 21 வயது இருக்கும் போது நானும் யோசித்து இருக்கிறேன் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், "தற்கொலை குறித்து நானும் யோசித்து இருக்கிறேன். தற்கொலை குறித்து 20, 21 வயது இருக்கும் போது நானும் யோசித்து இருக்கிறேன். கலை உலகம் என்னை கண்டுகொள்ளவில்லையே என்ற ஏக்கத்தில் யோசித்து இருக்கிறேன். வெற்றி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும், ஒருபோதும் அவசரப்பட கூடாது. வாழ்க்கையின் ஒரு அங்கம் மரணம். அது வரும்போது வரட்டும், நீங்களாக தேடாதீர்கள்.
33 சதவீத இட ஒதுக்கீடு என்பதில் எத்தனை சதவீதம் நிஜம்? ஏனென்றால் பெண்கள் பதவி பெற்றாலும் ஆண்கள் தான் ஆதிக்கம், அதிகாரம் செலுத்துகிறார்கள் அது பெண் சுதந்திரம் ஆகாது,முழுமையானது ஆகாது. முழுமையாக கொடுத்து விட்டால் 50 சதவீதம் 5 வருடத்தில் வரும்” என்றார்.