அவர்களை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது: நடிகை த்ரிஷா சொல்வது யாரை?

அவர்களை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது: நடிகை த்ரிஷா சொல்வது யாரை?

யாராவது ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்டால் அவர்களை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார். அவர் இதுவரை நடித்த படங்களில் முத்திரைப்படமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

மிஸ் சென்னை அழகி பட்டம் வென்ற த்ரிஷா தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இயங்கி வந்தாலும், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுகுறித்து அவ்வப்போது அவரிடம் கேள்வி எழுப்பப்படுகறிது. சமீபத்தில் 'பொன்னியின் செல்வன்' விழா ஒன்றில் நடிகை த்ரிஷாவிடம் திருமணம் குறித்து மீண்டும் வினா எழுப்பப்பட்டது.

அதற்கு த்ரிஷா, "மற்றவர்கள் சாதாரணமாக என்னிடம் எப்போது திருமணம் என்று கேட்டால்கூட பதில் சொல்லுவேன். ஆனால், யாரவது ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்டால் அவர்களை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "திருமணத்துக்குப் பிறகு விவகாரத்து என்பதே எனக்கு வேண்டாம்.. விவகாரத்தின்மீதும் நம்பிக்கை கிடையாது. மகிழ்ச்சியில்லாத ஒரு திருமணத்தை செய்துகொண்ட வாழ்வதற்கும் எனக்கு விருப்பம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய மனிதர் இவர்தான் என்று எனக்கு தோன்ற வேண்டும். அப்படியான ஒரு நபரைச் சந்தித்தால் கட்டயம் திருமணம் செய்து கொள்வேன்" என்று வெளிப்படையாக த்ரிஷா கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in