`தி க்ரே மேன்’ படத்துக்குள் எப்படி வந்தேன்னு தெரியல’: நடிகர் தனுஷ்

`தி க்ரே மேன்’ படத்துக்குள் எப்படி வந்தேன்னு தெரியல’: நடிகர் தனுஷ்

``தி க்ரே மேன் படத்துக்குள் எப்படி வந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை'' என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடித்துள்ள ’தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படம், வரும் 22-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. ’அவெஞ்சர்ஸ்’ படத்தை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ள படம் இது. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. ரியான் காஸ்லிங், கிறிஸ் எவான்ஸ், ஜெசிகா ஹென்விக் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் தனுஷ் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்தப் படத்தின் பிரிமீயர் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தனுஷ் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பின்னர் கேள்விகளுக்கு நடிகர் தனுஷ் பதிலளித்தார். அப்போது இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த தனுஷ், ’’நான் எப்படி இந்தப் படத்துக்குள் வந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. ஒரு நாள் காஸ்டிங் ஏஜென்சியில் இருந்து ஹாலிவுட் பட வாய்ப்பு இருக்கிறது என்றார்கள். என்ன படம் என்றேன். பெரிய பட்ஜெட் படம், முதலில் உங்கள் ஒப்புதல் தேவை என்றனர். பிறகும் படம் பற்றிக் கேட்டேன். அவர்கள் சொன்னதும் சிலிர்த்தேன். உற்சாகமாகிவிட்டேன். இதை விட பெரிதாக ஒன்றும் இருக்க முடியாது. என்னை மெருகேற்ற, கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், கிடைத்த அற்புதமான படம் இது. இதில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in