தொடர்ந்து அதே கேள்வி: எரிச்சல் இல்லை என்கிறார் பிரபாஸ்!

தொடர்ந்து அதே கேள்வி: எரிச்சல் இல்லை என்கிறார் பிரபாஸ்!

தன் மீதான அக்கறையில் ஒரே கேள்வி தொடர்ந்து கேட்கப்படுவதாக நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸ். 'பாகுபலி' படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபாஸ், இப்போது பான் இந்தியா நடிகர். அவர் நடிக்கும் படங்கள், பான் இந்தியா முறையில் அதிகப் பட்ஜெட்டில் தயாராகி வருகின்றன. அவர் சம்பளமும் ரூ.100 கோடிக்கு மேல் உயர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் நடித்து வெளியான, 'சாஹோ', 'ராதே ஷ்யாம்' ஆகிய பான் இந்தியா படங்கள், சரியான வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் அவர் அடுத்து கே.ஜி.எஃப் படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

 பிரபாஸ், அனுஷ்கா
பிரபாஸ், அனுஷ்கா

பிரபாஸின் திருமணம் பற்றி எப்போதும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவரும் நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதை மறுத்துள்ள இருவரும், தாங்கள் நண்பர்கள் என்று தெரிவித்துள்ளனர். திருமணம் நடக்கும் போது கண்டிப்பாகத் தெரிவிப்பேன் என்றும் நடிகர் பிரபாஸ் கூறி வருகிறார்.

தொடர்ந்து வரும் இந்தக் கேள்வி அவரை எரிச்சலூட்டுகிறதா? என்று சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறும்போது, ‘அது எனக்கு எரிச்சலைத் தரவில்லை. அந்த கேள்வி என் மீதான அக்கறையில்தான் கேட்கப்படுகிறது. இது பொதுவான, இயல்பான கேள்விதான். அவர்கள் இடத்தில் நான் இருந்தாலும் இதைத்தான் கேட்பேன்’ என்றார். ’சரி, எப்போது திருமணம்?’ என்று கேட்டதற்கு, அதற்கான பதில் கிடைத்தால், கண்டிப்பாக அறிவிப்பேன் என்று சிரிக்கிறார் பிரபாஸ்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in