`அவதூறு பேச்சுக்களை பற்றி நான் கவலைப்படுவ‌தில்லை'- சொல்கிறார் இளையராஜா

அகில இந்திய மத்திய வருவாய் கலாச்சார கலை கூடல் நிகழ்ச்சியில் இளையராஜா
அகில இந்திய மத்திய வருவாய் கலாச்சார கலை கூடல் நிகழ்ச்சியில் இளையராஜா `அவதூறு பேச்சுக்களை பற்றி நான் கவலைப்படுவ‌தில்லை'- சொல்கிறார் இளையராஜா

"தன்னைப் பற்றி வரும் அவதூறு பேச்சுக்களை பற்றி நான் கவலைப்படுதில்லை" எனறு இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

34-வது அகில இந்திய மத்திய வருவாய் கலாச்சார கலை கூடல் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலக அரங்கத்தில் இன்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியை இசையமைப்பாளரும் மாநிலங்களவை நியமன உறுப்பினருமான இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் மறைமுக வரிகள் மற்றும் மத்திய வாரிய அதிகாரி ரமாமேத்யூ, மத்திய கலால் அதிகாரி மண்டலிகா ஸ்ரீனிவாஸ், தமிழ்நாடு மண்டலத்தின் முதன்மை ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஜனனி ஜனனி ஜகம் நீ என்னும் தன்னுடைய பாடல் வரிகள் மூலம் பாடி நிகழ்ச்சியை இளையராஜா தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் பேசிய இளையராஜா, "ஒரு சிற்பிக்கு எவ்வாறு தேவையில்லாத பாகங்களை நீக்கினால் மட்டுமே அதன் சிலை உருவாகுமோ, அதுபோல தேவையில்லாத தட்டுகளை நீக்கினால் மட்டுமே முறையான தாளம் உருவாகும். அதுபோல தன்னைப் பற்றி வரும் அவதூறு பேச்சுகளை நான் ஒருபோதும் கண்டு கொள்வதில்லை. உங்கள் அனைவரையும் என்னுடைய ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அழைத்து சென்று காட்ட வேண்டும் என்பது ஆசை. அனைவரையும் ஸ்டுடியோ அழைத்து செல்ல முடியாது" என்று கூறிய அவர், ஸ்டுடியோவில் நடைபெறும் ரெக்கார்டிங் நிகழ்ச்சியை செல்போன் மூலமாக ஒலிபரப்பினார்.

மேலும் அவர் பேசுகையில், "இப்போது உங்கள் அனைவரையும் எனது ஸ்டுடியோவிற்கு அழைத்து சென்ற மகிழ்ச்சி எனக்கு உள்ளது'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in