`நடிகர் சூர்யாவை காப்பி அடிப்பேன்'- ரிஷப்ஷெட்டி!

`நடிகர் சூர்யாவை காப்பி அடிப்பேன்'-  ரிஷப்ஷெட்டி!

``நடிகர் சூர்யாவின் ஸ்டைலை காப்பி அடிப்பேன்'' என நடிகர் ரிஷப்ஷெட்டி தெரிவித்துள்ளார்.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரிஷப்ஷெட்டி. சமீபத்தில் கன்னடத்தில் வெளியான அவரது ‘காந்தாரா’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக மாறினார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ திரைப்படம் தற்போது ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. இதனைப் படக்குழு மகிழ்ச்சியுடன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது.

அவர் தனது சமீபத்திய பேட்டியில், தனது கல்லூரி காலங்களில் ’கஜினி’ படத்தில் நடிகர் சூர்யாவின் உடை மற்றும் ஹேர்ஸ்டைல், நடை இவற்றை எல்லாம் காப்பி அடித்ததாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல், ‘கஜினி’, ‘நந்தா’, ‘பிதாமகன்’ என இப்போது வரைக்கும் நடிகர் சூர்யா தன்னுடைய அடுத்தடுத்தப் படங்களில் புதுப்புது தோற்றங்கள் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டே இருப்பதையும் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in