எஸ்எம்எஸ்சை க்ளிக் செய்தேன்... அதன்பின் நடந்ததைச் சொல்லி அழுத சீரியல் நடிகை

எஸ்எம்எஸ்சை க்ளிக் செய்தேன்... அதன்பின் நடந்ததைச் சொல்லி அழுத சீரியல் நடிகை

என் செல்போனுக்கு வந்த ஒரு எஸ்.எம்.எஸைக் கிளிக் செய்தேன். அதன் பின்பு நடந்தவை ரணமானவை எனச் சொல்லி அழுதவாறே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சீரியல் நடிகை லெட்சுமி வாசுதேவன்.

அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது, “என் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதை க்ளிக் செய்து திறந்தேன். உடனே ஒரு செயலி தானாகவே என் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. அதில் உங்களுக்கு லக்கி பரிசு அடித்துள்ளது என வந்தது. அதைக் க்ளிக் செய்ததும், நான் 5000 ரூபாய் லோன் வாங்கியியிருப்பதாகவும் அதை உடனே கட்டவேண்டும் எனவும் தகவல்வந்தது. தொடர்ந்து போனிலும் அதைக் கட்டச் சொல்லி மிரட்டினார்கள். இதனிடையே நான் கட்ட மறுத்ததும், என் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக என் போனில் இருந்த அனைத்து வாட்ஸ் அப் எண்ணிற்கும் அனுப்பியுள்ளனர். இதில் என் பெற்றோருக்கும் கூட அந்த மார்பிங் புகைப்படம் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து எனக்கு பணத்தை கட்டச்சொல்லி வாய்ஸ் மெசேஜ், போன்கால் என வருகிறது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸிலும் புகார் கொடுத்திருக்கிறேன்.

என்னைப் போல் வேறு யாரும் எஸ்.எம்.எஸை ஓப்பன் செய்துவிடக் கூடாது என விழிப்புணர்விற்காகவே இதைச் சொல்கிறேன்.” என அழுதுகொண்டே வீடியோ வெளியிட்டுள்ளார் சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in