ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததற்காக மிகவும் வருந்துகிறேன்: மனம் நொந்து மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததற்காக மிகவும் வருந்துகிறேன்: மனம் நொந்து மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்

பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டதால் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து விட்டேன். இனி மேல் இது போன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று பிரபல நடிகர் லால் மன்னிப்பு கோரியுள்ளார்.

பிரபல மலையாள நடிகரும், இயக்குநருமான லால், தமிழில் பல படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஷாலுடன் 'சண்டக்கோழி', சசிகுமாருடன் 'குட்டிப்புலி', சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', தனுசுடன் 'கர்ணன்' என பல்வேறு படங்களில் மிரட்டிய லால், சமீபத்தில் வெளியான 'டாணாக்காரன்' படத்தின் பேசப்படும் வகையில் நடித்திருந்தார். தற்போது மணி ரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடித்துள்ளார். இவர் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்திருந்தார்.

ஆன்லைன் ரம்மி மோகத்தால் பலர் சொத்துக்களை இழப்பதுடன் கடன் வாங்கி அதைக்கட்ட முடியாமல் தற்கொலை செய்து வருகின்றனர். கேரள சட்டப்பேரவையில் சில நாட்களுக்கு முன்பு கே.பி.கணேஷ்குமார், ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிப்பவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். அத்துடன் இந்த விளம்பரங்களில் இருந்து அவர்களை விலகுமாறு அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுததிருந்தார்.

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வதாக நடிகர் லால் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " கரோனா ஊரடங்கின்போது, பொருளாதார நெருக்கடி காரணமாக ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால், கடுமையான பிரச்சினைகள் மற்றும் தற்கொலைகள் நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. அரசின் அனுமதியுடன்தான் இந்த விளம்பரத்தில் நடிக்க என்னை அழைப்பதாக நினைத்தேன். ஏற்கனவே பல நடிகர்கள் இதுபோன்ற விளம்பரங்களில் நடித்திருப்பதால், இவ்வாறான பின்விளைவுகள் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. நான் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்ததால், இந்த விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததற்காக மிகவும் வருந்துகிறேன். இனிமேல் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். நான் நடித்த இந்த விளம்பரத்தின் மூலம் யாரையாவது தவறாக வழிநடத்தி, அதன்மூலம் அவர்கள் துன்பங்களை அனுபவித்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று லால் மனம் வருந்தி பேட்டியளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in