பாலிவுட் நண்பர்களுக்கு ’வலிமை’: ஹூமா குரேஷி ஏற்பாடு

ஹூமா குரேஷி
ஹூமா குரேஷி

தனது குடும்பத்தினர் மற்றும் பாலிவுட் நண்பர்களுக்காக, ’வலிமை’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு நடிகை ஹூமா குரேஷி ஏற்பாடு செய்தார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம், ’வலிமை’. நாயகியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஆக்‌ஷன் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஹூமா குரேஷி
ஹூமா குரேஷி

இந்நிலையில், இந்தப் படத்தில் போலீஸாக நடித்திருக்கும் ஹூமா குரேஷி, தனது பாலிவுட் நண்பர்களுக்காகவும் குடும்பத்தினருக்காகவும் ’வலிமை’ சிறப்புக் காட்சிக்கு மும்பையில் நேற்று ஏற்பாடு செய்திருந்தார். இதில் தயாரிப்பாளர் போனி கபூர், ஷான்வி கபூர், குஷி கபூர், சஞ்சய் கபூர், அன்சுலா கபூர் உள்பட பாலிவுட் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in