லாரன்ஸ், சரத்குமார் பங்கேற்ற பிரம்மாண்ட சண்டைக் காட்சி

லாரன்ஸ், சரத்குமார் பங்கேற்ற பிரம்மாண்ட சண்டைக் காட்சி

’பைவ் ஸ்டார்’கதிரேசன் இயக்கும் ’ருத்ரன்’படத்துக்காக ரூ.2 கோடி செலவில் பிரமாண்ட சண்டைக் காட்சியை படமாக்கி உள்ளனர்.

தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா உட்பட சில படங்களைத் தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இவர் இப்போது இயக்குநராக அறிமுகமாகும் படம், ’ருத்ரன்’. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். மற்றும் சரத்குமார், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

பிரியா பவானி சங்கர், லாரன்ஸ், கதிரேசன்
பிரியா பவானி சங்கர், லாரன்ஸ், கதிரேசன்

இந்தப் படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடந்து முடிந்துள்ளது. அங்கு ரூ.2 கோடி செலவில் பிரமாண்ட சண்டைக் காட்சியை 10 நாட்கள் படமாக்கி இருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ், சரத்குமார் மற்றும் ஏராளமான ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்ற இந்தச் சண்டைக் காட்சியை ஸ்டன் சிவா அமைத்திருக்கிறார். இதோடு 85 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்தது என்றும் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.