உதயநிதியின் 'கலகத்தலைவன்' படம் எப்படி இருக்கிறது?: முதல்வர் ஸ்டாலின் ரியாக்ட்

உதயநிதியின் 'கலகத்தலைவன்' படம் எப்படி இருக்கிறது?: முதல்வர் ஸ்டாலின் ரியாக்ட்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான 'கலகத் தலைவன்' படத்தைப் பார்த்து ரசித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், படக்குழுவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள படம் 'கலகத் தலைவன்'. இப்படம் உலகமெங்கும் நாளை (நவ. 18) வெளியாகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 'கலகத் தலைவன்' திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார். சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக 'கலகத் தலைவன்'படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in