`கே.ஜி.எஃப் 2’-க்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

`கே.ஜி.எஃப் 2’-க்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

சூப்பர் ஹிட்டான கே.ஜி.எஃப் 2 படத்துக்காக யாஷ் உள்ளிட்டவர்கள் வாங்கிய சம்பள விவரம் தெரியவந்துள்ளது.

தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2’. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகனாக யாஷ், அவர் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசை அமைத்துள்ளார். கடந்த மாதம் 14-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் இந்த படம் வெளியானது. ரிலீஸ் ஆன நாளில் இருந்தே வசூலைக் குவித்து வரும் இந்தப் படம், உலகம் முழுவதும் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்த ஹீரோ யாஷ், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்துக்காக முதலிலேயே சம்பளம் பேசாத யாஷ், படத்தின் ரிலீஸ் வரை காத்திருந்து, படத்தின் லாபத்தில் பங்கு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி அவருக்கு ரூ.30 கோடி சம்பளமாக கிடைத்துள்ளது. நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிக்கு ரூ.4 கோடியும், இந்தி நடிகை ரவீணா டாண்டனுக்கு ரூ.2 கோடியும் நடிகர் சஞ்சய் தத்துக்கு ரூ.10 கோடியும் சம்பளமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல், ரூ.20 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in