லதா மங்கேஷ்கரின் உடல்நிலை எப்படி இருக்கிறது?

மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர்Hindu கோப்பு படம்

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பரவி வந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர், கடந்த வாரம் கரோனாவால் பாதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, கரோனா பரிசோதனையின்போது நிமோனியாவும் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஐ.சி.யூவில் இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பரவி வந்த நிலையில், ப்ரீச் கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அவர் திடமாக இருக்கிறார். இன்னும் ஒரு வாரம் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம். தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், அவரை வெளியே அனுப்ப விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in