இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது?- மகன் மனோஜ் புதுத் தகவல்

இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது?- மகன் மனோஜ் புதுத் தகவல்

இயக்குநர் பாரதிராஜா உடல் நிலை குறித்து அவரது மகனும் நடிகருமான மனோஜ் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல இயக்குநரான பாரதிராஜாவுக்கு அண்மையில் மதுரை விமான நிலையத்தில் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மதுரையில் ஒருநாள் ஓய்வெடுத்தார். அதன் பிறகு சென்னை வந்த அவர், நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் பாரதிராஜாவிற்கு நேற்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தந்தையின் உடல்நிலை குறித்து அவரது மகனும் நடிகருமான மனோஜ் விளக்கம் அளித்துள்ளார். அதில், "அப்பா நன்றாக இருக்கிறார். வழக்கமாக மருத்துவமனைக்கு சென்று சுகர் பரிசோதனை செய்து கொள்வார். அப்படித்தான் நேற்று மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, நடத்தப்பட்ட பரிசோதனையில் உடலில் உப்பின் அளவு குறைவாக இருந்ததால் உடலில் நீர்ச்சத்து குறைந்திருந்தது தெரியவந்தது. இதனால், அப்பா சோர்வாக இருந்தார். உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் அப்பாவுக்கு இப்போது ஓய்வு தேவை. அதனால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். மூன்று நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் அப்பா இருப்பார். தேவையான சிகிச்சைக்கு பிறகு அப்பா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in