படப்பிடிப்பில் பாலாவுடன் கடும் வாக்குவாதம்: பாதியிலேயே வெளியேறிய சூர்யா?

படப்பிடிப்பில் பாலாவுடன் கடும் வாக்குவாதம்: பாதியிலேயே வெளியேறிய சூர்யா?

`எதற்கும் துணிந்தவன்’ படத்தை அடுத்து சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தை பாலா இயக்குகிறார். 'நந்தா', 'பிதாமகன்' படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இருவரும் மீண்டும் இணைகின்றனர். சூர்யாவின் 41-வது படமான இதில், அவர் இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு கேரக்டரில், வாய் பேச இயலாத, காது கேளாதவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

படத்தை சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கும் என்று கூறப்பட்டது. செட் வேலை முடிவடையாததால், ஷூட்டிங் தொடங்குவது தள்ளிவைக்கப்பட்டது. கடற்கரை பகுதியில் நடக்கும் கதையை கொண்ட படம் என்பதால் கன்னியாகுமரி அருகே படத்துக்காக கிராமம் செட் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தப் படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரியில் கடந்த 28-ம் தேதி பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டிருந்த நடிகர் சூர்யா, "என் வழிகாட்டியான இயக்குநர் பாலா, ஆக்‌ஷன் என்று சொல்வதற்காகக் காத்திருந்தேன். 18 வருடங்களுக்குப் பிறகு அந்த மகிழ்ச்சி நடந்திருக்கிறது. இந்த தருணத்தில் உங்கள் வாழ்த்துகள் தேவை" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யாவுக்கும், இயக்குநர் பாலாவுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், படப்பிடிப்பை விட்டு சூர்யா பாதியில் வெளியேறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழு தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in