ஏ.ஆர்.ரஹ்மானின் காலில் விழுந்து வணங்கிய பிரபல பஞ்சாப் ராப் பாடகர் ஹனிசிங்

ஏ.ஆர்.ரஹ்மானின் காலில் விழுந்து வணங்கிய பிரபல பஞ்சாப் ராப் பாடகர் ஹனிசிங்

அபுதாபியில் நடைபெற்றுவரும் ஐஐஎஃப்ஏ விருது வழங்கும் விழாவில் பிரபல ராப் பாடகர் யோயோ ஹனிசிங், ஏ.ஆர்.ரஹ்மானின் காலில் விழுந்து வணங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அபுதாபியில் நடைபெறும் ஐஐஎஃப்ஏ விருதுகள் வழங்கும் விழாவின் ஒத்திகை நிகழ்ச்சியின் போது மேடையில் நடனமாடிய பஞ்சாபி ராப் பாடகர் ஹனிசிங், மேடையிலிருந்து இறங்கிவந்து பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் கால்களில் விழுந்து வணங்கினார்.

காலில் விழுந்து வணங்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பகிர்ந்துள்ள பாடகர் ஹனிசிங், "ஏ.ஆர்.ரஹ்மான் முன்பு பாடியது எனது வாழ்க்கையின் முக்கியமான தருணம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும், சல்மான் கானின் வருகை தொடர்பான காட்சிகளையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஹனிசிங்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in