சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாகும் பிரபல ஹீரோயின்!

ஹனி ரோஸ்
ஹனி ரோஸ்

தமிழில் விக்ராந்த் நடித்த ‘முதற்கனவே’, ஜீவாவின் ‘சிங்கம்புலி’, ‘கந்தர்வன்’ உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஹனி ரோஸ். தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ள இவர், இப்போது சுந்தர்.சியின் ’பட்டாம்பூச்சி’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கு சினிமாவின் சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஹனி ரோஸ், பாலகிருஷ்ணா
ஹனி ரோஸ், பாலகிருஷ்ணா

’அகண்டா’ ஹிட்டுக்குப் பிறகு கோபிசந்த் மலினேனி இயக்கும் படத்தில் நடிக்கிறார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த ஆக்‌ஷன் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஹனி ரோஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். பாலகிருஷ்ணாவின் 107-வது படமான இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in