பிரபல மலையாள நடிகர் காலமானார்

பிரபல மலையாள நடிகர் காலமானார்
கைனகரி தங்கராஜ்

மலையாள நடிகர் கைனகரி தங்கராஜ் காலமானார். அவருக்கு வயது77.

கேரள மாநிலம், கொல்லம் அருகில் உள்ள கேரளாபுரத்தைச் சேர்ந்தவர், பிரபல மலையாள நடிகர் கைனகரி தங்கராஜ். நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், 35 படங்களில் நடித்துள்ளார். சுமார் பத்தாயிரம் நாடகங்களில் நடித்துள்ள இவர், சிறந்த நாடக நடிகருக்கான விருதை இரண்டு முறை பெற்றிருக்கிறார். பிரேம் நசீர் நடித்த அனாப்பச்சன் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து சினிமா மற்றும் நாடகங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் வெளியான லூசிஃபர், இஷ்க், ஹோம் படங்களிலும் நடித்திருந்தார். கடைசியாக மம்மூட்டியின் ’நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவருக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

அவர் மறைவு கேரளத் திரைப்படத்துறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் உட்பட பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.